புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வாய்ப்பிளக்க வைக்கும் வேட்பு மனு விவரங்கள்
புதுச்சேரி, 21 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.36 கோடி என வேட்பு மனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி பிரமாண பத்திரத்தில் எனது ஆண்டு வரும
ரங்கசாமி


புதுச்சேரி, 21 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின்

மதிப்பு ரூ.36 கோடி என வேட்பு மனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி பிரமாண பத்திரத்தில் எனது ஆண்டு வருமானம் 2020 -21 இல் ரூ.4 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 140 ஆக இருந்தது.

இது 2021-22 இல் ரூ.3

லட்சத்து 15 ஆயிரத்து 990 ஆக இருந்தது.

22-23 ஆம் ஆண்டில் 4 லட்சத்துக்கு 58 ஆயிரத்து 80 ஆகவும், 23-24 இல் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம்

400 ஆக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 110 ஆக

இருந்ததாக கூறியுள்ள அவர், கையிருப்பில் ரூ. 33 ஆயிரத்து 339 இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளையில் ரூ.49,632 இருப்பதாகவும்,

ஹெச்டிஎப்சி வங்கிக் கணக்கில் ரூ.98 ஆயிரத்து

241-ம் இருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

21 லட்சத்து

25 ஆயிரத்து 752 ரூபாய் மதிப்புள்ள இரண்டு மோட்டாா் சைக்கிள், 2 காா்கள், ஒரு

முத்து செயின், ஒரு மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாகவும் ரங்கசாமி தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

தட்டாஞ்சாவடி பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் ரூ.8 கோடி மதிப்பிலான இடம்

இருப்பதாகவும், அதே, தட்டாஞ்சாவடி பகுதியில் 25 ஆயிரம் சதுர அடியில்

ஒன்றும், 40 ஆயிரம் சதுர அடியில் மற்றொன்றும் என்று இரண்டு இடங்கள்

இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதில் 2,400 சதுர அடியில் கட்டடம் இருக்கிறது என்றும் இதன் மொத்த

மதிப்பு ரூ.27 கோடியே 78 லட்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ரூ.35 லட்சம் கடன்

இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்மீது, எந்த விதமான குற்ற வழக்குகளும்

நிலுவையில் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்

அசையும் சொத்துகளாக தனது பெயரில் ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 232 ம், மனைவி

பெயரில் ரூ. 8 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 529 உள்பட ரூ.16 கோடியே 50

லட்சத்து 13 ஆயிரத்து 70 இருப்பதாகக் கூறியுள்ளார்.

அசையா சொத்தில் அவரது பெயரில் ரூ.27 கோடியே 10 லட்சத்து 4 ஆயிரத்து 230 உள்பட

குடும்பத்தினருக்கு ரூ.68 கோடியே 95 லட்சத்து 79 ஆயிரத்து 772 இருப்பதாகக்

கூறியுள்ளார்.

மேலும், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 கோடியே 90

லட்சத்து 61 ஆயிரத்து 621 கடன் இருப்பதாகவும் அவா் கூறியுள்ளார்.

சட்டசபை சபாநாயகர் செல்வம் பிரமாண பத்திரத்தில் அசையும் சொத்துகளாக தனது

பெயரில் ரூ.71 லட்சத்து 55 ஆயிரத்து 969 உள்பட குடும்பத்தினருக்கு ரூ.18

கோடியே 30 லட்சத்து 9,944 இருப்பதாகக் கூறியுள்ளார்.

அசையா சொத்துகளில் தனது பெயரில் ரூ.2 கோடியே 33 லட்சம் உள்பட ரூ.71 கோடியே 90

லட்சத்து 3,333 இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam