Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 20 லிட்டர் கேன் ஐந்து ரூபாயும் ஒரு லிட்டர் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில் மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் இலங்கேஷ்வரன் ஆலந்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியில் கடந்த 20 வருடங்களாக எந்த விலையும் ஏற்றப்படவில்லை. ஆனால் தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் விலையை உயர்த்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம் என்றார்.
மேலும், மூலப் பொருள்கள் 40% விலை உயர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு அவற்றை பல வழிகளில் தாக்கு பிடித்து மக்களுக்காக விலை உயர்த்தாமல் சமாளித்து வந்தோம். ஆனால் தற்பொழுது 20 லிட்டர் கேன் ஐந்து ரூபாயும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் 3 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
மினரல் வாட்டர் விற்பனையை பொறுத்த வரையில் போக்குவரத்து செலவு தான் அதிகப்படியானது. அரசு விற்பனை செய்யும் குடிநீர் பாட்டில்கள் அவர்களின் பேருந்துகளிலேயே இலவசமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது. அது போன்று தான் ரயில்வேயும் செய்கிறது.
இதனால் அவர்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. ஆனால் தாங்கள் அப்படி அல்ல, போக்குவரத்து செலவே தங்களுக்கு அதிகமாக உள்ளது.
போர் சூழலுக்கும் விலை உயர்வுக்கும் எந்த காரணமும் இல்லை என்ற அவர், மூலப்பொருள்களின் விலை உயர்வு, வேலையாட்களின் சம்பள உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு இதன் காரணமாகத்தான் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam