குற்றால மெயின் அருவியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
தென்காசி, 21 மார்ச் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில் ஏரளமான குற்றால அருவிகள் உள்ளன. இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தமிழகம் மட்டுமல்லதும் அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிகம
Renovation works


தென்காசி, 21 மார்ச் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில் ஏரளமான குற்றால அருவிகள் உள்ளன. இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தமிழகம் மட்டுமல்லதும் அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிகமான மக்கள் வருகின்றனர். குறிப்பாக சீசன் கால கட்டங்களில், கூட்டம் களை கட்டும்.

சீசன் நிறைவடைந்த நிலையில், குற்றாலம் பிரதான அருவியில் கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளை பெருவெள்ளம் அடித்துச் செல்லாதவாறு சிறப்பம்சமாக இருந்த பிரம்மாண்ட பாதுகாப்பு வளைவு தற்போது உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

தனித்துவமான இந்த பாதுகாப்பு வளைவானது சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆங்காங்கே வளைவுப் பகுதியில் சிமெண்ட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்தன.

இது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டு, புதிய பிரம்மாண்ட அமைப்பு கட்டப்பட உள்ளது.

மேலும், குற்றாலம் பிரதான அருவியின் முன்புறமுள்ள தேங்கிய குளம் போன்ற பகுதியை தற்காலிகமாக மூடி, குளிக்கும் இடத்தை சுமார் எட்டு மீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவும், ஆண்கள் குளிக்கும் இடத்தின் கீழ்ப்புறம் முதல் பெண்கள் குளிக்கும் மேல்பகுதி வரை பிரம்மாண்ட வளைவு அமைத்து, எட்டு அடி உயரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் இடத்தை பிரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்கப்படவுள்ளது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதேபோல், பெண்கள் குளிக்கும் பகுதியை ஒட்டி இருந்த பிரத்யேக உடை மாற்றும் அறையும் அகற்றப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b