இந்தியாவில் அறிமுகமாகி உள்ள சாம்சங் கேலக்சி எம்17இ ஸ்மார்ட்போன்
சென்னை, 21 மார்ச் (ஹி.ச.) இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்17இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில
இந்தியாவில் அறிமுகமாகி உள்ள சாம்சங் கேலக்சி எம்17இ ஸ்மார்ட்போன்


சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்17இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்17இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் கேலக்சி எம்17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. இந்த சூழலில் தற்போது கேலக்சி எம்17இ போன் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. முந்தைய பதிப்புடன் ஒப்பிடும்போது இந்த போனின் சிப்செட், பேட்டரி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி எம்17இ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:

- 6.7 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளே

- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்

- ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

- 50 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

- 4, 6 ஜிபி ரேம்

- 128 ஜிபி ஸ்டோரேஜ்

- 6,000mAh பேட்டரி

- 25 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

- 5ஜி நெட்வொர்க்

- யுஎஸ்பி டைப்-சி போர்ட்

இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

இந்த போனின் விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM