Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக மலை மீது செல்ல முற்பட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே மலை மது செல்லஅ னுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தி வருகிறோம்.
ரம்ஜான் நாள் அதுவும் அடுத்த நிறுத்தி ஒரு ஒரு வராக அனுப்புவது சரியில்லை என்ன வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறி காவல்துறையினருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியா வழக்கமாக மலை மீது செல்லும் அனைவரிடமும் கேட்கும் விவரங்களை கேட்க பிறகு தான் அனுப்ப முடியும் என்றும் புதிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
காவல்துறைக்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் புனித ரம்ஜான் நாள் அதிகமாக எங்களை தடுத்து நிறுத்துவது சரி இல்லை என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam