Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களிடம் முகநூல் நேரலையில் உரையாடினார்.
அப்போது கட்சி குறித்து சில விஷயங்களை அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது,
மக்கள் நல கூட்டணியில் விசிகவிற்கு 25 தொகுதிகள் கிடைத்தது அப்போது சுதந்திரமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்தது.
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் குறைவாக சொற்ப அளவிலே தொகுதிகள் கிடைக்கும்.
குறைந்த அளவில் தொகுதிகளை பெற்று போட்டியிடுவதால் வேட்பாளர் தேர்வில் நெருக்கடிகள் ஏற்படும் சூழல் உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் என இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் நமது நிலைப்பாட்டை மாற்றக்கூடாது, தற்போது நாம் பெரும் தொகுதிகள் என்பது தற்காலிக பின்னடைவாக இருந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொகுதிகளை பெறுகிறோம்.
விசிக மட்டும் தமிழகத்தில் வளர நினைக்கவில்லை ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து வளர்கிறது. இடதுசாரி சிந்தனை உள்ள கட்சிகளுடன் பயணிப்பதே சிறந்தது.
கடந்த முறை அரக்கோணம் தொகுதியில் விசிக தோல்வி அடைந்ததற்கு திமுக சார்பில் வெளியில் இருந்து வேட்பாளரை இந்த தொகுதியில் இறக்கி விட்டீர்கள். அதான் தோல்விக்கு காரணம் என தெரிவித்தனர்.
அதேபோல வானூரிலும் விசிக தோல்வியடைந்தது.
உண்மை என்னவென்றால் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக்க நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது அவற்றில் சில தொகுதிகளில் உயர் தொகுதியில் உள்ள நபரை வேட்பாளராக முன்னிறுத்தினோம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அதுபோன்று இல்லை அவர்கள் கூட்டணி கட்சியிடம் இருந்து எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தகவலை தருகிறார்களோ அந்த மாவட்டத்தில் மாவட்ட குழு கூடி மூன்று நிர்வாகிகளை தேர்வு செய்வர். அதன் பிறகு மாநில தலைமை வேட்பாளரை அதே தொகுதியில் இருந்து தேர்வு செய்யும்.
கூட்டணி கட்சியில் போராடி தொகுதிகளை பெறுகிறோம், போராடி நிதியைப் பெற்று தொகுதிகளில் நிற்கிறோம். போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு மேற்கொள்ளும் தகுதி படைத்தவர்களாக இல்லை. எனக்குத் தெரிந்த நட்பு சக்திகளிடமிருந்து தேர்தல் நிதியைப் பற்றி நாம் தேர்தலை சந்தித்து வருகிறோம்.
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர வேண்டும் என நினைக்கும் எந்த ஒரு பெரிய சக்தியும் இல்லை. நமக்கு ஆதரவான சக்திகளை விட எதிரான சக்திகள் அதிகமாக உள்ளது.
அரசியலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் களம் புதிதாகவே உள்ளது. அதுவும் இந்த தேர்தலும் நமக்கு புதிதுதான் என்று அவர் பேசினார்.
Hindusthan Samachar / P YUVARAJ