வி.சி.க- விற்கு எத்தனை இடங்கள் என திமுக கூட்டணியில் இன்னும் கையெழுத்தாகவில்லை - தொல்.திருமாவளவன்
சென்னை, 21 மார்ச் (ஹி.ச) சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று விருப்பமான பெறும் நிகழ்வு தொடங்கியது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், திருவண்ணாமலை
VCK Thirumavalavan


சென்னை, 21 மார்ச் (ஹி.ச)

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று விருப்பமான பெறும் நிகழ்வு தொடங்கியது.

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான விருப்ப மனு பெறப்படுகிறது.

இன்று முதல், நான்கு நாட்களுக்கு விருப்ப மனு பெறப்பட உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,

விசிக விருப்ப மனுபெறும் நிகழ்வு தொடங்கி உள்ளது.இன்று 9 மாவட்டங்களை சார்ந்தவர்கள் விருப்பமனு வழங்கலாம்.

விருப்பமனு கட்டணமாக 5000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஒரு விண்ணப்ப படிவம் 100 ரூபாய் கட்டணம்.

ஒவ்வொரு சட்டமன்ற பொது தேர்தலின் போது விருப மனு பெறுவது ஜனநாயக நடைமுறையாக கடைப்பிடித்து வருகிறோம்.

நேர்காணல் நடத்துவதற்கான கால சூழல் இல்லை. என்றார்.

மக்கள் நல கூட்டணியில் 25 இடங்கள் கிடைத்தது சுதந்திரமாக வேட்பாளர்களை தேர்வு செய்தோம் திமுக கூட்டணியில் 10 இடங்களுக்கும் குறைவான சொற்பமான தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளீர்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

விசிக்கவினருக்கு வெளிப்படையாக சொல்ல நினைக்கிறேன்.கூட்டணி பேச்சு வார்த்தையில் என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதை கட்சியினரிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

கட்சியினர் எதிர்பார்ப்பில் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக பேசினேன்.

இரண்டு ஒரு நாட்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது தெரிந்துவிடும்.

கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமானதோ அதே போல நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலனும் முக்கியமானது.

விசிக்காவிற்கு எத்தனை இடங்கள் என திமுக கூட்டணியில் இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மை.

இழுபறி என்று சொல்ல முடியாது, தாமதம் என்று சொல்லலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி நலனுக்கு எதிராக போகாது. கட்சியின் நலனை அக்கறை கொண்டு அவர்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். அதையும் தவறாக சொல்ல முடியாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவாக இருக்கும். வலிமையை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

விரைவில் சுமூகமான தீர்வை காண்பார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனிடம் பலமுறை பேசி இருக்கிறேன்.

கூட்டணிகள் தொடர்வது அவருடைய நலன்களுக்கும் கூட்டணி நலனுக்கும் இன்றியமையாத தேவை என்பதை சுட்டி காட்டி இருக்கிறேன்.

ஆனாலும் அவர் கட்சியின் முன்னணி தோழர்களோடு பேசி சுதந்திரமாக முடிவெடுப்பார். திமுக கூட்டணியிலேயே அவர் தொடர வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் விருப்பம்.

அதிமுக கூட்டணிக்கு போயஸ் தோட்டத்தை தேடி வந்த சென்ற காலம் மாறி டெல்லியை நோக்கி தேடிப் போகும் காலம் உருவாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை பாஜக கிள்ளிக்கீரையாக நடத்துகிறதோ? என்ற எண்ணம் பொது வழியில் உருவாகியுள்ளது.

திமுக கூட்டணியில் எந்த முன் நிபந்தனையும் நான் விதிக்க வில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதற்கு சில தடைகள் உள்ளது.

அந்தத் தடவை அகற்றுவதற்கு, எல்லா சமூகத்தினரும் இந்த இயக்கம் தங்களுக்கான இயக்கம் என உணர்கிற சூழலை உருவாக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான நம்பகத்தன்மை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். அதுதான் எங்களின் வெற்றியாகவும் நாங்கள் பார்க்கிறோம்.

ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கம் செல்கிறோம் என்பது மேலோட்டமாக தற்காலிகமாக வெற்றியாக இருக்கலாம்.

ஆனால் அதைவிட கொள்கை பிடிப்போடு இருக்கிறார்கள், பதவிகளுக்காக நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளவில்லை, வலதுசாரி அரசியலுக்கு எதிரான போராட்டங்களில் இருந்து பின்வாங்கவில்லை. பொதுச் சமூகத்தின் நம்பிக்கையை பெறுவது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நம்பகத்தன்மை என்பதை பார்க்கிறேன்.

எங்கள் வலிமை எங்களுக்கு தெரியும், வெளியில் இருந்து வரும் விமர்சனங்களில் பெரிது படுத்தவில்லை. எங்கள் முடிவு என்பது எங்களை சார்ந்தது,மண்ணை சார்ந்தது,மக்களை சார்ந்தது. திமுக கூட்டணியில் கூடுதலாக சீட்டு வாங்குவோம். என்றார்.

எவ்வளவு சீட் என்பதை இரண்டு ஒரு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். ஒற்றை இலக்கமா?இரட்டை இலக்கமா?என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

இரண்டு ஒரு நாட்களில் தெரிந்துவிடும் ஆனால் கூடுதலாக சீட்டு வாங்குவோம். என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ