Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 22 மார்ச் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆந்திர வனத்துறையினர் வாகன தணிக்கையில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது தமிழக பதிவு எண் கொண்ட காரை அவர்கள் தடுத்து
நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது ஆந்திர வனத்துறையினரிடமிருந்து தப்பித்து காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளனர்.
இதனையடுத்து ஆந்திர வனத்துறையினர் அவர்களை துறத்தி வந்தனர்.
மேலும் அவர்கள் ஆந்திர எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைந்த நிலையில், இது குறித்து தமிழக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து
பரதராமி சோதனை சாவடியில் வனத்துறையினர் காரை தடுத்து நிறுத்த முயன்ற போது அங்கிருந்து தப்பிய கார் வேகமாக குடியாத்தம் நோக்கி வந்துள்ளது.
இதனையடுத்து ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் காரை சேசிங் செய்து
வந்துள்ளனர்.
அப்போது குடியாத்தம் அருகே பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த கார்
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்தது இதனையடுத்து காரில் இருந்த மூன்று பேர் அங்கிருந்து தப்பிவிட்ட நிலையில் சுமார் 500 கிலோ செம்மரக்கட்டைகளுடன் காரைவனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் படுகாயம்
அடைந்த இருவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னரே அவர்கள் யார் அவர்கள் எந்த ஊரில் இருந்து யாருக்கு செம்மர கட்டைகளை கடத்திச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவரும்.
மேலும் தங்களை துறத்தி வந்த ஆந்திர வனத்துறையினரின் காரை கவிழ்பதற்க்காக
இவர்கள் செம்மரக்கட்டையை சாலையில் வீசியதாக ஆந்திர வனத்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam