பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் -புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
சென்னை, 22 மார்ச் (ஹி.ச.) பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெ
Chennai Central–New Delhi Express Train Service Extension


சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து புதுடெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்திற்கு நாளை (திங்கட்கிழமை) மற்றும் 30-ந் தேதி சிறப்பு ரெயில் (வண்டி எண்-06019) இயக்கப்படுகிறது.

அதே போல, ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வருகிற 26 மற்றும் ஏப்ரல் 2-ந் தேதி சிறப்பு ரெயில் (06020) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b