Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
சென்னை கிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதில்,
தமிழகத்தில் மனிதர்களுக்கு இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை - எனவே பறவைக் காய்ச்சல் பரவலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் .
இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகளே H5N1 பறவைக்காய்ச்சல் அறிகுறிகளாக உள்ளது .
இந்த வகை பாதிப்பு கொண்டவர்கள் சுய மருந்துகள் உட்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது அவசியம் .
பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும்.
ஏதேனும் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்/ அரசு மருத்துவமனை/மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முழுமையாக சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இறைச்சி கூடங்களில் பணிபுரிபவர்கள் இறைச்சி கழிவுகளை பொதுவெளியில் கொட்ட கூடாது
பண்ணை தொழிலாளர்கள் கையுறைகள், முகக்கவசம் (Mask) மற்றும் பூட்ஸ் காலணிகளை அணிய வேண்டும். பண்ணைகளில் கிருமிநாசினி (Disinfectant) தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இந்நோய் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம் , கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104-ஐ தொடர்புகொள்ளவும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ