விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
தென்காசி, 22 மார்ச் (ஹி.ச) ரம்ஜான் பண்டிகையானது நேற்றைய தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் இன்றைய தினம் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்
Old Cuttralam Falls


தென்காசி, 22 மார்ச் (ஹி.ச)

ரம்ஜான் பண்டிகையானது நேற்றைய தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் இன்றைய தினம் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது குற்றால பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் பராமரிப்பு பணிகளானது நடைபெற்று வரும் நிலையில், ஐந்தருவி மற்றும் சிற்றருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐந்தருவியில் உள்ள இரண்டு கிளைகளில் மட்டுமே தண்ணீரானது கொட்டி வரும் நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியை நோக்கி சென்று வருகின்றனர்.

குறிப்பாக, தற்போது கோடை காலம் என்பதால் அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைவாக கொட்டி வருவதால், குறைவாக கொட்டி வரும் தண்ணீரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் மற்றும் பண்டிகை கால விடுமுறைகளை குடும்பத்தினருடன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN