தருமபுரி அருகே ஓட்டல் உரிமையாளரின் மனைவி மீது தாக்குதல் -குற்றவாளி கைது!
தருமபுரி, 22 மார்ச் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, வினோபாஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பிரியதர்ஷினி, (37). இவர், கவிதா தியேட்டர் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டலில் பரோட்டா பார்சல் கட்டும் பணியில் இருந்தார். அப்போத
தாக்குதல்


தருமபுரி, 22 மார்ச் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, வினோபாஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்.

இவரது

மனைவி பிரியதர்ஷினி, (37). இவர், கவிதா தியேட்டர் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

ஓட்டலில் பரோட்டா பார்சல் கட்டும் பணியில் இருந்தார்.

அப்போது வினோபாஜி தெருவை சேர்ந்த சச்சின் குமார், (27), ஓட்டலுக்கு வந்து பணம் தராமல், மூன்று பார்சல்

பரோட்டா கேட்டுள்ளார்.

பணம் கொடுத்தால் தான் பார்சல் கொடுக்கமுடியும் என

பிரியதர்ஷினி கூறினார்.

இதில் கோபம் அடைந்த சச்சின் குமார், பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறி, தகாத

வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்து, பிரியதர்ஷினியின் தாடையில் ஓங்கி குத்தியதில் அவர் காயமடைந்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சச்சின் குமார் மற்றும்

அவருடன் வந்த நபரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

படுகாயமடைந்த பிரியதர்ஷினியை

மீட்ட பொதுமக்கள், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் குமாரை கைது செய்தனர்.

தற்போது பிரியதர்ஷினியை தாக்கும் நபர் வீடியோ சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam