Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார்.
இந் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்றைய தினம் நேர்காணல் நடை பெற்று வருகிறது.
இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பங்கேற்காதது அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பொன்முடி விருப்ப மனு அளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
1989 சட்டமன்ற தேர்தல் முதல் எட்டு சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக போட்டியிட்ட பொன்முடி இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என உறுதியான தகவலும் வெளியாகி இருக்கிறது.
ஆறு முறை வெற்றி பெற்று இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்று முறை அமைச்சராக பொன்முடி இருந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடி இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு அவருடைய மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணியும் போட்டியிட விருப்ப மனு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam