Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 22 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பொன்னை நான்கு வழிச்சாலை சந்திப்பில், நிலைக்கண்காணிப்புக் குழு (SST) குழு-3 அதிகாரி துணை பி.டி.ஓ லட்சுமி தலைமையில், போலீசார் உட்பட வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த i20 கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1,69,700/- ரொக்கப் பணத்தைக் கண்டறிந்தனர்.
விசாரணையில், காரில் வந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். கவுஸ்கான் (75) என்பது தெரியவந்தது.
முறையான ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பணத்தை அதிகாரிகள் உடனடியாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN