Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நிர்வாக குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்டறிந்தார்.
இதில் பெரும்பாலான நிர்வாகிகள் குறைந்தது 3 தொகுதிகளையாவது கேட்டுப் பெற வேண்டும், டார்ச் லைட் சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கூறிய நிலையில் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை.
இதனால் மீண்டும் ம.நீ.ம நிர்வாகிகள் இமெயில் மூலம் கருத்துகளை தனக்கு பகிரலாம் என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ