Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 22 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு சிவசக்தி திருக்கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி பஞ்ச வாத்தியங்கள் முழங்க வேத மந்திரங்களை ஓதி கோவில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றி வைத்த நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்
பத்து நாட்கள் நடைபெறும் பங்குனிபெருந்திருவிழாவில் தினமும் அலங்கார தீபாராதனை, சந்தண குட ஊர்வலம், உஷ பூஜை, ஸ்ரீ பூதபலி பூஜையும் 9 ஆவது நாள் உற்சவ மூர்த்திகள் திரு வீதி உலாவும் நடைபெறவுள்ளது.
10 ஆவது நாள் சிகர நிகழ்ச்சியாக ஆராட்டும் ஒடுக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam