Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 மார்ச் (ஹி.ச.)
இன்று கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரியின் நான்காம் நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,
வெல்ல முடியாத துணிச்சலுக்கும் ஆன்மீக வலிமைக்கும் பிரதிநிதியாக விளங்கும் அன்னை குஷ்மாண்டாவிற்கு என் பணிவான வணக்கங்கள்.
அன்னையின் தெய்வீக சக்தி ஒவ்வொரு இதயத்திலும் புதிய விழிப்புணர்வை உருவாக்கட்டும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றான அன்னை குஷ்மாண்டா, நவராத்திரியின் நான்காம் நாளில் சிறப்பாக வழிபடப்படுகிறார்.
சைத்ர நவராத்திரி திருவிழா, துர்கா தேவியையும் அவளது ஒன்பது வடிவங்களையும் போற்றி வழிபடும் பாரம்பரியத்தை உள்ளடக்கியதாகும்.
மேலும், சைத்ர நவராத்திரி இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கும் முக்கியமான திருநாளாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM