Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச)
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் தினேஷ் என்கிற சம்போ தினேஷ்( 35).
இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 42 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், a+ கேட்டகரி ரவுடியாக இருந்து வருகிறார்
இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்ட ரவுடி தினேஷை தெற்கு மண்டல இணை ஆணையர் செபஸ் கல்யாண் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரவுடி சென்னை ஜாபர்கான் பேட்டையில் பதுங்கி இருந்த தினேஷை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
ரவுடி சம்போ தினேஷ் போலீசாரின் கெடுபிடிகள் காரணமாக ஆந்திரா ஒடிசா பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்து கொண்டுள்ளார்.
குறிப்பாக பெங்களூர் ஆந்திரா ஒடிசா ஆகிய பகுதிகளில் இருந்து ஹோல்சேல் மூலமாக கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள் என்பதால் முன்கூட்டியே அதிகமான கஞ்சாவை வாங்கி வந்து குமரன் நகர் பகுதியில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியமான நபராக தேடப்பட்டு வரும் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முன்னதாக கர்நாடகா முழுவதும் சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மூலமாக சம்போ செந்திலை தினேஷ் அனுகியதும் தெரிய வந்துள்ளது.
பல ஆண்டுகளாக போலீசாருக்கு ரவுடி சம்போ செந்தில் குறித்த துப்பு கிடைக்காமல் திணறி வரும் நிலையில், இவரது தகவலை கொண்டு மீண்டும் போலீசார் விசாரணையை துவங்க பக்க பலமாக அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தினேஷை குமரன் நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ