Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பிரசார குழு ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டபின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது பேசிய அவர்,
தேர்தல் களம் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது
திமுக ஆட்சி இனியும் தொடர்ந்தால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
திமுக எவ்வளவு காசு கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
ஓ பன்னீர்செல்வம் கூட்டங்களுக்கு காசு கொடுத்தாலும் கூட்டம் வரவில்லை.
இவன மாறி மோசமான ஆளை பார்க்க கூடாது என நான் சொல்லவில்லை.
மக்கள் உணர்வாக உள்ளது.
உடனே செல்லூர் ராஜூ பன்னீர்செல்வம் குறித்து இப்படி பேசிவிட்டார் என சொல்லாதீர்கள்.
அண்ணன் மேல எங்களுக்கு தனி மரியாதை உண்டு தென் மாவட்டத்துக்காரர்.
அவருடைய நடவடிக்கை மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி உள்ளார்.
ஒரு டீ கடைக்காரரை மூன்று முறை முதலமைச்சராக்கிய, பலதுறைக்கு அமைச்சராகிய இயக்கம் அதிமுக.
எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கு அவரே உதாரணம் ஆகிவிட்டார் பாருங்கள்.
அதிமுக கூட்டங்களில் ஸ்டாலின் குறித்து பன்னீர்செல்வம் பேசாத பேச்சா?
அம்மா இல்லை என்றதும் அப்படியே மாறிவிட்டார்.
அவரை பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என மேலும் பேசுவதை தவிர்த்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ