Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 மார்ச் (ஹி.ச)
தமிழக அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கின்றன என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன என பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மேடையில் ஏறி ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான மருத்துவக் கட்டமைப்பு என்று வெற்றுப் பீலா விடும் முதலமைச்சர் முகமதின் அவர்களே, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களே உங்கள் 'விடியல்' மாடல் இதுதானா?
கடலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டிருக்கிறது. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. ஒரு உயிர் காக்கும் பிரிவில் ஜெனரேட்டர் வசதி கூட இல்லாதது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த விடியா ஆட்சியில் தமிழக அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கின்றன என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன:
சிவகங்கை: செம்மனூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய நோயாளி சிகிச்சைக்காகக் காத்திருக்க, மருத்துவர் அறையில் இருந்ததோ மது பாட்டில்கள்!
சென்னை: புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி செழிப்பாக வளர்கிறது.
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையை முழுமையாக 'எலிகள் சரணாலயமாக' மாற்றிவிட்டார்கள்.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல், நோயாளிகளை நிற்க வைத்தே 'டிரிப்ஸ்' (Drips) ஏற்றும் அவலநிலை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பு: இவை போதாதென்று, இப்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உள்ளேயே படுகொலை நடக்கும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நோயாளிகளுக்கும் பாதுகாப்பில்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை.
கேமராவுக்குப் போஸ் கொடுப்பதையும், தற்பெருமை பேசுவதையும் நிறுத்திவிட்டு, மருத்துவமனைகளின் நிலையைச் சீரமையுங்கள். மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனே நிறுத்துங்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ