Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (இந்த.)
சென்னை அண்ணா நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகம் மற்றும் இனிப்பகத்தின் கிளையை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து, உணவை ருசித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த நடிகர் சிவக்குமார்.
இன்று ஹோட்டல் இல்லாமல் மனிதர் வாழ முடியாத நிலை உள்ளது.
நான் சென்னைக்கு வந்த பொழுதில் முதல் 10 ஆண்டுகள் என் உடம்பைக் காப்பாற்றியது ஹோட்டல்கள் தான்.
அப்போது மாதத்திற்கு 45 ரூபாய் செலவழித்து மாதம் முழுவதும் சாப்பிட்டேன்.
இட்லி 6 பைசா, வடை 5 பைசா என இருந்தது. இன்று காலங்கள் மாறிவிட்டது. பணத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் தரமாக உணவு கொடுப்பது என்பது முக்கியம்.
உங்களுக்கு பிடித்தது வீட்டு சாப்பாடா அல்லது ஹோட்டல் சாப்பாடா என்ற கேள்விக்கு,
நடிகை பிடிக்குமா பொண்டாட்டி பிடிக்குமா என்று கேட்பது போல உள்ளது.
பொண்டாட்டி இல்லை என்றால் சூர்யா கார்த்தி எப்படி பிறந்திருப்பார்கள்.
நடிகை என்றால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியுமா.
வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம், ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால் ஹோட்டலில் சாப்பிடலாமே தவிர, மூன்று வேளையும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.
எப்போதுமே வீடு, மனைவி, குழந்தை குட்டி அதற்கு பின்பாகத்தான் ஹோட்டல், என்றார்.
உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ,
16 வயது பையன் இளமையாக தான் இருப்பான். என்ன இது கேள்வி. இப்போது காலை வரும் போது ஒரு கை பழைய சாதம், இரண்டு டம்ளர் மோர், பப்பாளி மற்றும் கொய்யா துண்டுகளை சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறேன்.
குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கம், நேரத்திற்கு சாப்பிடுங்கள் காலை வாக்கிங் செல்லுங்கள். ஏசி அறையில் தூங்காதீர்கள்.
நடிகர் நாடாளலாம் என உலகத்திற்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். இன்னொரு நடிகர் பிறப்பதற்கு வாய்ப்பில்லை.
ரெனால்ட் ரீகனுக்கு முன்பாக நாட்டை ஆண்டவர் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு வாரிசுகள் இல்லை, குழந்தைகள் இல்லை. உலகத்திலேயே பெரிய நடிகர் சிவாஜி மாதிரி இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் அவர் அரசியலில் தோற்றுப் போனார். என்ன சொல்ல வருகிறேன் என்றால், எல்லாம் பெற்றவன் என்பவன் எவனும் இல்லை, உழைத்துக் கொண்டே இருங்கள், கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோஷப்படுங்கள் யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள், என்றார்.
அரசியலுக்கு வர்றீங்களா என்ற கேள்விக்கு,
காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தேன் அந்த வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது, என கலகலப்பாக பதிலளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ