தோழி வீட்டிற்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
கிருஷ்ணகிரி, 22 மார்ச் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அருகேயுள்ள ஜெயினூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி பானுப்பிரியா. இந்த தம்பதியினருக்கு சோபனா (13) என்ற மகள் இருந்தார். இவர் மாரி செட்டி அள
பலி


கிருஷ்ணகிரி, 22 மார்ச் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அருகேயுள்ள ஜெயினூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்.

இவருடைய மனைவி பானுப்பிரியா.

இந்த

தம்பதியினருக்கு சோபனா (13) என்ற மகள் இருந்தார். இவர் மாரி செட்டி அள்ளி

கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று

வந்தார்.

நேற்று சனிக்கிழமை அன்று, சோபனாவின் பெற்றோர்கள் வழக்கம் போல கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் தனது தம்பியிடம், அருகில் வசிக்கும் தனது

தோழி வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு சோபனா தனது சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், மாரி செட்டி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுமி ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு

அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக நாகரசம்பட்டி காவல்

நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகரசம்பட்டி போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்த சிறுமியின் உடலை மீட்டனர்.

விசாரணையில், அவர் காணாமல் போன

மாணவி சோபனா என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் உடலைக்

கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் மரணம் குறித்து நாகரசம்பட்டி

போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் ஜெயினூர் மற்றும் மாரி செட்டி அள்ளி

கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam