பிரதமர் மோடி நீண்ட நாட்கள் பணியாற்றி சாதனை - டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை, 22 மார்ச் (ஹி.ச.) இந்திய அரசின் தலைவராக 8,931 நாட்கள் பணியாற்றிய சாதனை படைத்துள்ள பிரதமர் மோடி தொடர்ந்து மூன்று மக்களவை தேர்தல்களில் (2014, 2019, 2024) வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த சாதனைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்
TTV Dhinakaran


சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)

இந்திய அரசின் தலைவராக 8,931 நாட்கள் பணியாற்றிய சாதனை படைத்துள்ள பிரதமர் மோடி தொடர்ந்து மூன்று மக்களவை தேர்தல்களில்

(2014, 2019, 2024) வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த சாதனைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை இலக்காகவும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதையே கொள்கையாகவும் ,நிர்ணயித்து ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b