Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் பங்குனி திருவிழாவானது இந்த ஆண்டு விழா நாளை(மார்ச் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
6-ந் தேதி வரை 15 நாட்கள் விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
வருகிற 28-ந் தேதி கைப்பாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான், தெய்வானையை பக்தர்களும், கோவில் சீர் பாதங்களும் கைப்பாரமாக சுமந்து செல்வது தனிச்சிறப்பாகும். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படும்.
1-ந்தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 2-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 3-ந்தேதி முருகப்பெருமானுக்கு தங்க கீரிடம் சூட்டி நவரத்தினங்களாலான செங்கோல் வழங்கி பட்டாபி ஷேகம் நடைபெறவுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை யின் திருக்கல்யாணம் nநடைபெறவுள்ளது. அப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. 6-ந் தேதி தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளில் கோவில் நிர்வாகத்துடன் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b