வார விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை 22 மார்ச் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்
Tiruvannamalai ahead of the weekend.


திருவண்ணாமலை 22 மார்ச் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வழக்கமாக விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

அந்தவகையில், இன்று வார விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராஜகோபுரம் வழியாக சென்ற பொது தரிசனம் வரிசையானது கோவிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவரை நீண்டு காணப்பட்டது.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பொது தரிசனம் வழியில் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் ஒருசில பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b