Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
தண்ணீர் தினத்தில் நீரின் அவசியத்தை உணர்ந்து நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துவோம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று மார்ச் 22 உலக தண்ணீர் தினம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் நீரின் அவசியத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் ஒப்பற்ற பொக்கிஷங்களில் நீர் முதன்மையான ஒன்று என்பதை உணர்வோம்
இத்தருணத்தில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission) மூலம் வீடுகள் தோறும் தரமான, தூய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திருப்பது பெருமைப்படும் தருணமாகும்.
இதில் அதிக பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ