Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி 22 மார்ச் (ஹி.ச.)
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது முக்கியமான திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் விசேஷ நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் நடை பயணமாகவும், வாகனங்களிலும் வந்து கடலில் மற்றும் நாழிக்கிணற்று புனித தீர்த்தத்தில் மூழ்கி நீண்ட நேரம் வரிசையில் காத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு வருகை தந்திருந்த அதிகப்படியான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நெடிய வரிசையில் காத்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிகளவு பக்தர்கள் வருகை இருப்பதால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டணத் தரிசன வரிசையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் மேற்கொள்கின்றனர்.
பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b