தேர்தலை புறக்கணிப்பதாக முண்டகம்பாடி மலைக்கிராம மக்கள் அறிவிப்பு
சேலம், 22 மார்ச் (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள முண்டகம்பாடி மலைக்கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அந்த கிராம மக்கள், முக்கிய சாலையில் பேனர் ஒன்று வைத்துள்ளனர். அதில், குடிநீர் வசதி, சாலை ஆக்கிரமிப்பு, மய
election boycott


சேலம், 22 மார்ச் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள முண்டகம்பாடி மலைக்கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

அந்த கிராம மக்கள், முக்கிய சாலையில் பேனர் ஒன்று வைத்துள்ளனர்.

அதில், குடிநீர் வசதி, சாலை ஆக்கிரமிப்பு, மயானம் செல்வதற்கு சாலை, தெருவிளக்கு, கழிப்பிடம், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் வேண்டி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் கிராம மக்கள் இதுவரை, அரசு அதிகாரிகள், அமைச்சர்களிடம் கொடுத்த மனுக்களின் ஒப்புகை சீட்டு விபரங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.

திடக்கழிவு கிடங்குசங்ககிரி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்து குறுக்குப்பாறையூரில் உள்ள திடக்கழிவு மேலாண் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றி, அங்கு கால்நடை மருத்துவமனை அமைக்கக்கோரி, 273 நாட்களாக அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்ததால், ஆர்ப்பாட்டத்தை தொடர அனுமதி கோரி, அப்பகுதி விவசாயி சுப்பிரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர், சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தொகுதி தேர்தல் அலுவலர் கேந்திரியாவிடம் மனு அளித்தனர்.

அதில், திடக்கழிவு மேலாண் கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றாவிட்டால், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b