Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள அவர், சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும்,ப்சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அதில் 20 புகார்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், மீதம் உள்ளவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவிற்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அடையாள அட்டை வழங்கும் பணியை வரைவு படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், தேர்தலில் வாக்கு பதிவு சதவிதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ