Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 23 மார்ச் (ஹி.ச)
பெங்களூரு- திருவனந்தபுரம் வடக்கு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547 மற்றும் 06548) இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் சேவையின் காலம் இம்மாதம் இறுதியோடு முடிவடைய இருந்தது. ஆனால் இந்த சிறப்பு ரெயிலை மேலும் 2 மாதத்திற்கு அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே மாதம் 27-ந் தேதி வரை புதன்கிழமை தோறும்
(9 சேவை) இயக்கப்படுகிறது.
பெங்களூருவில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும். பின்னர் ஈரோடு. திருப்பூர், போத்தனூருக்கு அதி காலை 2.58- மணிக்கும். பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலை யத்திற்கு மதியம் 1.15 மணிக்கும் செல்லும்.
அதேபோல, மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) வருகிற ஏப்ரல் 2-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை வியாழக்கிழமை தோறும் (9 சேவை) இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் வடக்கில் பிற்பகல் 3.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப் பட்டு போத்தனூருக்கு நள்ளிரவு 12.15-மணிக்கும், திருப்பூர், ஈரோடு வழி யாக சேலத்திற்கு அதிகாலை 3.50 மணிக்கும் வந்தடையும். அதன்பிறகு சேலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலின் பெட்டிகளில் மூன்றடுக்கு ஏ.சி.பெட்டிகளை குறைத்து கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயில் சேவைகளை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b