Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
ஜோலார்பேட்டை - தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், 13 ரயில்களின் சேவையில் நாளை (மார்ச் 24 ஆம் தேதி) மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, அரக்கோணம் - சேலத்துக்கு நாளை
(மார்ச் 24-ம் தேதி) அதிகாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், சேலம் - அரக்கோணத்துக்கு அதேநாளில் பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், கோவை - சென்னை சென்ட்ரலுக்கு அன்றைய தினம் காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - கோவைக்கு பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில், ஈரோடு - ஜோலார்பேட்டைக்கு அதேநாளில் காலை 6 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், ஜோலார்பேட்டை - ஈரோடுக்கு பிற்பகல் 2.45 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ஆகிய 6 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் - கோவைக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், இரண்டு பணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
கோவை - சென்னை சென்ட்ரலுக்கு நாளை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில், 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும்.
இதுதவிர, 2 விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் இடையில் ஆங்காங்கே நின்று செல்லும். 3 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b