Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (33) என்பவர் மீது, அவருடைய உறவினரான கார் ஓட்டுனர் மணிகண்டன் (33).
இருவரும் ஒரே தெருவில் அருகருகே வசித்து வந்த நிலையில், இரு குடும்பங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மறைத்து வைத்து இருந்த கத்தியால் மணிகண்டன், ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ராமச்சந்திரனின் இடது கை மணிக்கட்டு துண்டாகியதுடன், வலது கையில் ஆழமான காயம், இரு கால்களிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது.
மேலும் கல்லால் தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனை மடக்கிப்பிடித்து வானகரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வானகரம் போலீசார், காயமடைந்த ராமச்சந்திரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரனுக்கு தலையில் 35 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு மணிகண்டனை கைது செய்தனர்.
விசாரணையில் காயமடைந்த ராமச்சந்திரன் அடிக்கடி மது அருந்தி மணிகண்டனின் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சொத்து பிரச்னையில் உறவினரை தாக்கியதாக கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ