Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் ரவுண்டானா அருகே நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜிஎன்டி சாலை புனித அன்னாள் மகளிர் கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த ஜீப்பில் 50.66 லட்சம் பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் உட்பட இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
இந்த நிறுவனம் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை வசூல் செய்து வங்கியில் டெபாசிட் செய்யும் பணியினை மேற்கொண்டு வருவது தெரியவந்தது.
மேலும் ஓட்டுநர் சேவியர் ராஜ், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் இவரும் நேற்று பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் பகுதிகளில் உள்ள 17 டாஸ்மாக் கடைகளில் இருந்து பணத்தை வசூல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
Hindusthan Samachar / P YUVARAJ