சட்டமன்ற தேர்தல் 2026 - தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியின் கள நிலவரம்!
தருமபுரி, 23 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தருமபுரி சட்டப் பேரவை தொகுதியானது இதுவரை 16 சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 17 ஆவது தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தொகுதியில் பொன்விழா கொண்டாடிய அரசு கலை
Dharmapuri Assembly Constituency


தருமபுரி, 23 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தருமபுரி சட்டப் பேரவை தொகுதியானது இதுவரை 16 சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது.

தற்போது 17 ஆவது தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தொகுதியில் பொன்விழா கொண்டாடிய அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

தருமபுரி சட்டப் பேரவை தொகுதியில் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய இரு வருவாய் வட்டங்கள், தருமபுரி, நல்லம்பள்ளி என 2 ஊராட்சி ஒன்றியங்கள், 33 வார்டுகள் கொண்ட தருமபுரி நகராட்சி ஆகியவை அடங்கியுள்ளன.

இத்தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக 3 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், தேமுதிக, ஜனதா கட்சி, அதிமுக ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இதுவரை 16 தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் 4, திமுக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, அதிமுக 5 என வெற்றி பெற்றுள்ளன. கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று தங்களின் கோட்டையாக மாற்றி வைத்திருக்கின்றனர்.

2016ல் ஆர்.முருகன் வென்ற நிலையில், அடுத்து நடந்த 2019 இடைத்தேர்தல், 2021 தேர்தல் ஆகியவற்றில் வி.சம்பத்குமார் எம்.எல்.ஏவாக வாகை சூடினார்.

கடைசியாக நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அ.குமார் அவர்களை 30,362 வாக்குகள் வித்தியாசத்தில் வி.சம்பத்குமார் தோற்கடித்தார்.

இந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 99,061 என்பது கவனிக்கத்தக்கது. இது தருமபுரி மண்டலத்தில் பெற்ற பெரிய வெற்றி எனக் கூறலாம். அரூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலினத்தவர்கள், வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில் 2026 தேர்தலில் அரூர் தொகுதியை தங்கள் வசமே வைத்திருக்க அதிமுகவும், இந்த தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் திமுகவும் தீவிரம் காட்டி கொண்டிருக்கின்றன. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ சம்பத்குமார் அதிமுக சார்பில் மீண்டும் சீட் கேட்கிறார்.

அன்புமணி தரப்பு பாமக தற்போது எடப்பாடி பழனிசாமி உடன் கைகோர்த்திருப்பதால் வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் எனக் கணக்கு போட்டு வைத்துள்ளனர். மறுபுறம் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் சீட் கேட்க திட்டமிட்டுள்ளது.

இவர்கள் கடந்த தேர்தலில் 68,699 வாக்குகளை பெற்றிருந்தனர். மேலும் விசிகவும் இந்த தொகுதியை எதிர்பார்க்கிறது. ஏனெனில் பட்டியலின சமூக வாக்குகள் பெருவாரியாக இருப்பதால், அதை கைப்பற்ற வியூகம் வகுக்கிறது.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விசைத்தறி நெசவுக்கூடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டுவருகின்றன. சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக 10 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்கவுள்ளன.

தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனியார் பங்களிப்புடன் புதிய புகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், பாரதிபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொப்பூர் பகுதியில் தொடர்ந்து நேரும் விபத்துகளை கருத்தில்கொண்டு ரூ. 775 கோடியில் 6.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான தொழிலாளர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டை பயன்பாட்டுக்கு வந்தபின்னர் இந்த நிலை மாறி, ஏராளமான தொழிலாளர்கள் தருமபுரிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் வரிசையில், தருமபுரி முதல் மாவட்டமாக உள்ளது.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, தொழிற்சாலைகளை நிறுவவேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2 ஆவது அலகை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும், தருமபுரி நகரை ஒட்டி ஓடும் சனத்குமார் நதி கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும். தருமபுரி- மொரப்பூர் இடையே ரயில்பாதை அமைக்க வேண்டும். புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தொப்பூர் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்குள்ள மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

இருதய சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு உள்ளிட்ட துறைகளில் நவீன சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b