உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 6.58 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்
திண்டுக்கல், 23 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் பழைய ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே கண்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிரு
Dindigul


திண்டுக்கல், 23 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் பழைய ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே கண்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல்

கொண்டு சென்ற, ரூ.4 இலட்சத்தி 68 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல வத்தலக்குண்டு தேனி சாலையில் வணிகவரித்துறை அதிகாரி உமாதேவி தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் ஈடுபட்ட வாகனச் சோதனையில் திருச்செங்கோட்டிலிருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு பிவிசி பைப் ஏற்றிவந்த மினி லாரியில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 1.90 இலட்சம் பறிமுதல் செய்தனர்,

இன்று காலை மட்டும் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வத்தல்குண்டு-நிலக்கோட்டை பகுதியில் இருவேறு இடங்களில் ரூ 6.58 இலட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN