தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் இதுவரை 300 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கவில்லை என தகவல்
தமிழ்நாடு, 23 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சென்னை காவல்துறைக்குட்படடு 24 தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற துப்
துப்பாக்கி


தமிழ்நாடு, 23 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சென்னை காவல்துறைக்குட்படடு 24 தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மொத்தமாக 2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் உள்ள நிலையில், இதுவரை 1490 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீதம் 300 துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

இதில் விளையாட்டிற்காகவும், வங்கி பாதுகாப்பிற்காகவும் வைத்துள்ள 527 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam