அரசு திட்டம் தொடர்பாக நூற்றுக்கணக்கான தையல் இயந்திரங்களை கொண்டு வந்து இறக்கியதை பாஜகவினர் எதிர்த்ததால் பரபரப்பு
கன்னியாகுமரி, 23 மார்ச் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சுமார் 400 தையல் இயந்திரங்கள் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு சுமை பணி தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டி
தையல் இயந்திரம்


கன்னியாகுமரி, 23 மார்ச் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சுமார் 400 தையல் இயந்திரங்கள் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு சுமை பணி தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விரைந்து வந்த பாஜக நிர்வாகிகள் அரசு திட்டம் தொடர்பாக தேர்தல் நேரத்தில் தையல் இயந்திரங்களை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு தரப்பில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது என அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அரசு திட்டங்கள் மூலம் தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கு முயற்சி நடைபெறுகிறதா இந்த சந்தேகம் வருவதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பரபரப்பானது.

Hindusthan Samachar / GOKILA arumugam