பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை ஊழியர் கைது
ஜெய்ப்பூர், 23 மார்ச் (ஹி.ச.) அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திருப்ருகாரில் இருக்கின்ற சபுவா விமானப்படைத் தளத்தில் பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் ஊழியராகப் பணிபுரிந்து வந்தவர் சுமித்குமார் (வயது 36). இவர் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இந்தியாவின் மறைவான ராணுவத
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை ஊழியர் கைது


ஜெய்ப்பூர், 23 மார்ச் (ஹி.ச.)

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திருப்ருகாரில் இருக்கின்ற சபுவா விமானப்படைத் தளத்தில் பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் ஊழியராகப் பணிபுரிந்து வந்தவர் சுமித்குமார் (வயது 36).

இவர் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இந்தியாவின் மறைவான ராணுவத் தகவல்களைக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில் ஜெய் சல்மாரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் முடிவில் சுமித்குமார் கைதானது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தைச் சார்ந்த சுமித்குமார் கடந்த 2023-ம் ஆண்டு முதலே பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

அக்காலகட்டத்தில் போர் விமானங்கள் இருக்கும் இடம், ஏவுகணைக் கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் உட்பட முக்கியமான ஆவணங்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பி வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் சுமித்குமார் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM