Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச)
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் அக்குழுவின் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூறும் போது,
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் வரும் வெள்ளிக்கிழமை முழுமையாக முடித்து தலைமைக்கு தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கையில் திமுக அதிமுக'வை போன்று இலவசங்கள் இடம்பெறுமா.? என்ற கேள்விக்கு,
இலவசங்களை மட்டுமே முன்னிறுத்தக் கூடிய தேர்தல் அறிக்கையாக இல்லாமல், மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்து வருவதாக கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ