இன்று முதல் 26 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 23 மார்ச் (ஹி.ச.) தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை கீழடு
இன்று முதல் 26 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)

தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, நாளை மற்றும் நாளை மறுநாள் கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகங்கள் சூழ்ந்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றிலிருந்து வரும் 26-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பம் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM