2 பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான தனியார் நூற்பாலை மீது வழக்கு பதிவு செய்யாமல் மௌனம் காத்து வரும் வெப்படை காவல்துறையினர்
நாமக்கல், 23 மார்ச் (ஹி.ச) நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அம்மன் கோவில் பகுதியில் செயல்படும் தனியார் தேவேந்திரா ஸ்பின்னிங் மில் என்கின்ற நூல் பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் பணி
பலி


நாமக்கல், 23 மார்ச் (ஹி.ச)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அம்மன் கோவில் பகுதியில் செயல்படும் தனியார் தேவேந்திரா ஸ்பின்னிங் மில் என்கின்ற நூல் பாலை செயல்பட்டு வருகிறது.

இந்த நூற்பாலையில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் பிரதோஷ மாகிய இரண்டு வட மாநில குடும்பங்கள் தங்கி பணிபுரிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த இரண்டு குடும்பத்தின் உடைய இரண்டு ஆண் குழந்தைகள் மர்மமான முறையில் தொழிற்சாலைக்கு பின்புறம் இருக்கின்ற கழிவு நீர் கால்வாய் எனப்படும் சிமெண்ட் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான தொழிற்சாலையின் மெத்தன போக்கிற்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் மீதும் தற்போது வரை வெப்படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் வேலையை மட்டும் பார்த்து வரும் காவல்துறையினர் ஏன் தற்போது வரை குழந்தைகளின் உயிரிழப்புக்கு சம்பந்தமான தொழிற்சாலை மீதும் அந்த தொழிற்சாலையில் திறந்த வெளியில் காணப்பட்ட கழிவுநீர் கால்வாயை பயன்படுத்திய உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam