Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே தொடங்கியது.
இந்த முறையும் எந்த கட்சிகள் உடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு கூடுதல் சிறப்பாக மாநில கட்சி என்ற அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ள 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்தார்.
காரைக்குடி தொகுதியில் இந்த முறை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளார்.
அதனை தொடர்ந்து மார்ச் 19 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026 ( தேர்தல் அறிக்கையை ) சீமான் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று முதல் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இன்றயை தினம் திருத்தணி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முனைவர் சந்திரன் அவர்களை ஆதரித்து 2026 சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட பரப்புரையை சீமான் மேற்கொள்ள உள்ளார்.
காலை 10.30 மணி அளவில் திருத்தணி முருகன் கோயிலில் வழிபாடு செய்த பிறகு வாகனத்தில் திருத்தணி வேட்பாளர் சந்திரனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதனை தொடர்ந்து திருத்தணி கமலா திரையரங்கம் அருகே மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை வாகன பரப்புரை மேற்கொள்கிறார் சீமான்
அதனை தொடர்ந்து மாலை சோளிங்கர் தொகுதியில் நான்கு கால் மண்டபம் அருகே உள்ள பகுதிகளில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சோளிங்கர் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பொறியாளர் அசோக் குமார் அவர்களை ஆதரித்து சீமான் வாகன பரப்புரையில் ஈடுப்பட உள்ளார்.
பின்னர் இராணிப்பேட்டை முத்துகடை பகுதியில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இராணிப்பேட்டை தொகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இளங்கலை ஆங்கிலம் தாரிக்கா சல்மான் அவர்களை ஆதரித்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் எடுத்துரைத்து சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட உள்ளார்.
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் மாறி மாறி இலவச அறிவிப்புகள் குறித்து சீமான் பேச உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாளை வேலூர் குடியாத்தம் ஆம்பூர் திருப்பத்தூர் ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளிலும்
25ஆம் தேதி கிருஷ்ணகிரி சூளகிரி பாலக்கோடு பாப்பிரெட்டிப்பட்டி பென்னாகரத்திலும்,
26ம் தேதி மேட்டூர் ஓமலூர் சேலம் வாழப்பாடி ஆத்தூர் கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும்,
27 ஆம் தேதி சங்கராபுரம் திருக்கோவிலூர் திருவண்ணாமலை சேத்துப்பட்டு வந்தவாசி தொகுதிகளிலும்,
28-ஆம் தேதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பூந்தமல்லி திருவள்ளூர் ஆவடி தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ