Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.)
2026-27 நிதியாண்டிற்கான டெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.
இன்று அனுசரிக்கப்படும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, ‘ஷஹீத்-இ-ஆசம்’ சர்தார் பகத் சிங்கிற்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மலரஞ்சலி செலுத்தினார்.
மேலும், பார்லிமென்ட் தெருவில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கப் பதிவாளர் (RCS) அலுவலகத்தில் பகத் சிங்கின் சிலையை அவர் திறந்து வைத்ததுடன், அந்தச் சுதந்திரப் போராட்ட வீரருடன் தொடர்புடைய புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற அறையையும் திறந்து வைத்தார்.
2026-ஆம் ஆண்டுக்கான டெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, முதல்வர் ரேகா குப்தா இன்று காலை ‘கீர் வழங்கும்’ சிறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில், பள்ளி மாணவர்களுக்காக தாமே ‘கீர்’ (பாயசம்) சமைத்து பரிமாறினார்.
இதில் மாநில அமைச்சர்கள் பர்வேஷ் சாஹிப் சிங், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / vidya.b