வாகன தணிக்கையில் இன்று வரை ரூ.42.61 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி, 23 மார்ச் (ஹி.ச) தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இதுவரை ரூ.42.61 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சிய
வாகன தணிக்கையில் இன்று வரை ரூ.42.61 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்


தூத்துக்குடி, 23 மார்ச் (ஹி.ச)

தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இதுவரை ரூ.42.61 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (23.03.2026) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 42,61,355 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 2,20,280 மதிப்பிலான இலவசப் பொருட்கள் மற்றும் ரூ. 30,593 மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b