Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 23 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள வணிகர் தெருவில் கணவர் இறந்து விட்டதால் மனைவி ஜெய சாந்தினி தன் வயதான தந்தையுடன் தனியாக வசித்து வந்தனர்.
இதனிடையே மகள் சினேகா கர்பமாக இருப்பதால் குளச்சலில் மருத்துவமனையில் தன் மகளுடன் தாய் மருத்துவ மனையில் தங்கியிருந்தார.
வீட்டில் வயதான தந்தையை கவனிக்க இதே வடசேரி பகுதியில் இருந்து வசந்தி, சுகுணை மற்றும் ஒரு பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
தன் மகளுக்கு சொத்து வாங்கி கொடுக்க வீட்டில் உள்ள நகையை விற்பதற்காக நகைகளை எடுக்க இரவு ஜெயசாந்தினி வீட்டிற்கு வந்தார். பிரோவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த 137 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வீட்டில் இருந்த வேலையாட்கள் மீது வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வடசேரி போலிசார் வீட்டில் பனியாற்றிய 2 பெண்கள், ஒரு ஆண் உட்பட 3 பேரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN