Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக சமையல் எரிவாய சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லாமல் தவித்து வரும் நிலையில் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள தனியார் இன்டேன் கேஸ் குடோன் முன்பாக வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி சிலிண்டருடன் காலை 6 மணி முதல் காத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து சிலிண்டர் லாரி வந்தவுடன் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரை நீண்ட வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர்.
மேலும் சிலிண்டர் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam