Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ. - பா.ம.க., - அ.ம.மு.க., த.மா.கா., -புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பழனி சாமியுடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தி உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பழனிசாமி கடந்த வாரம் டில்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது, பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகள் தொடர்பாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது வரை ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை, அ.தி.மு.க., இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியது.
இதற்காக, மத்திய அமைச்சரும், பா.ஜ. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று சென்னை வந்தார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சென்று, இன்று மதியம் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார்.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்பட்டது.
இதன்படி பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b