வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை சுத்தியலால் தலையில் தாக்கி 5  சவரன் தங்க நகைகள் கொள்ளை
திருவள்ளூர், 24 மார்ச் (ஹி.ச.) ஆவடி சின்னம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(55).தனது அக்காவுடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஆவடி மார்க்கெட் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை சந்திக்க மல்லிகா நேற்று முன்தினம் சென்று சந்தித்துவி
கொள்ளை


திருவள்ளூர், 24 மார்ச் (ஹி.ச.)

ஆவடி சின்னம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(55).தனது அக்காவுடன்

வசித்து வருகிறார்.

இவரது மகள் ஆவடி மார்க்கெட் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை சந்திக்க மல்லிகா நேற்று முன்தினம் சென்று சந்தித்துவிட்டு

வீடு திரும்பி உள்ளார்.

அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்து மர்ம நபர் ஒருவர்

திடீரென அவரது வீட்டுக்குள் நுழைந்து சுத்தியலால் தலையில் தாக்கி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா செய்வதறியாது ரத்தம் சொட்ட சொட்ட

நின்றுள்ளார்.

மேலும் கழுத்தை நெரித்து கழுத்திலிருந்த 3 சவரன் சங்கிலியை

கொள்ளையடிக்க முயன்றுள்ளன்.

தாக்குதலில் நிலை குலைந்த மல்லிகா கொள்ளையன்

கழுத்தை நெரித்ததால் அச்சத்தில் தங்க சங்கிலியை பறிகொடுத்துள்ளார்.

மூதாட்டிகள்

இருவரும் கொள்ளையனிடம் போராடி உள்ளனர், அவர்கள் அலறல் சத்தம் கேட்டு

அக்கம்பக்கத்தினர் வருவதையறிந்த கொள்ளையன் தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து மல்லிகா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட

போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தப்பி

சென்ற கொள்ளையன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடு புகுந்து

சுத்தியலால் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam