இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டர் வையர் அறுந்ததில் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து விழுந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிந்தது
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பெரியார் நகரை சேர்ந்தவர் தீபக்(26).. இவர் நேற்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு பைக்கில் பேசின் பிரிட்ஜ் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி மேம்பாலத்தில் அதிவேகம
Bike


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பெரியார் நகரை சேர்ந்தவர் தீபக்(26).. இவர் நேற்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு பைக்கில் பேசின் பிரிட்ஜ் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வியாசர்பாடி மேம்பாலத்தில் அதிவேகமாக வரும் போது ஆக்சிலேட்டர் வயர் அறுந்துள்ளது.

இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடித்து கீழே சாய்ந்தது.

அப்போது பைக்கில் இருந்து பெட்ரோல் வெளியேறி உடனே பைக் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இந்த விபத்தில் தீபக் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உடனே தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக மூலக்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த தீவிபத்து பைக் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த வியாசர்பாடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மேம்பாலத்தின் மீது எரிந்து கொண்டிருந்த பைக் தீயை அணைத்து அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ