காரின் இஞ்ஜின் பேனட்டில் வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி, 24 மார்ச் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் விஜய் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புதுச்சேரி பதிவெண் கொண்ட காரை நிறுத்தி ச
மதுபானம்


கள்ளக்குறிச்சி, 24 மார்ச் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் கள்ளக்குறிச்சி வட்டார

போக்குவரத்து அலுவலர் விஜய் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த

வழியாக வந்த புதுச்சேரி பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது கார் இஞ்ஜின்

பேனட்-டை திறந்த போது புதுச்சேரி மதுப்பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக அந்த காரை கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர்

அலுவலகத்திற்கு கொண்டு வந்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் தேர்தல்

நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்து நிலையில் தொடர்ந்து காரின் இஞ்சின்

பேனட்டை ஓபன் செய்து மது பாட்டில்களை எடுக்க தொடங்கிய நிலையில் எடுக்க எடுக்க

விலை உயர்ந்த பாண்டிச்சேரி மது பாட்டில்கள் வந்ததால் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் காரின் இஞ்சின் பேனட்டில் வைத்து 150 புதுச்சேரி மதுபாட்டில்களை

கடத்தி வந்த புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய

இருவரையும் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து

தொடர்ந்து மது பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட

கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam